பதிவுகள் உருவாகாத விதத்தில் வாழ்வது எப்படி?

_*Today's Question and Answer:*_

_*Q :* "How to avoid samskaras?"_

_*A :*  "Samskaras are the spiritual equivalent of the genetic qualities we bring into life._

_".. How not to make samskaras depends on how you live. You must live in such a way that you don't form impressions._

_"Samskaras are formed by thought and by action. Action is unavoidable._

_"Lord Krishna says in the Gita, 'Even I cannot be idle for a moment, because if I am idle or stop actions, the Universe will collapse.'_

_"So action is unavoidable. Once we are born on this world, we have to act -- even breathing is an activity._

_"Now, how to avoid samskaras when the action is inevitable, unavoidable?_

_"By acting in such a way that what I do, what I think, don't make impressions upon me._

_"You know like, when you stand on the sand, your footprint is there._

_"Some of you who are studying geology may know that the footprint can become a fossil over time -- for all eternity it is there._

_"So if I am able to act without any impression being formed on myself, my thoughts don't leave impressions on me,_

_'then I can lead a life in which there are no samskaras added to what I have brought._

_"And what I have brought can be removed by various techniques."_


_*~ P. Rajagopalachari (Chariji).*_ 
_*[('HeartSpeak 2004' - (Volume II) : 'When in Doubt, Refer to the Heart' : pp 126 - 127), ('இதய வாக்கு 2004' - (பாகம் 2) : 'சந்தேகம் எழும்போது இதயத்தைக் கேளுங்கள்' : பக். 126 - 127)]*_


_*இன்றைய கேள்வி பதில்:*_

_*கே:*  "சம்ஸ்காரங்கள் உருவாகாமல் எவ்வாறு தவிர்ப்பது? "_

_*ப:* "மரபணுக்களின் வழியாக வரும் நம் குணாதிசயங்களே ஆன்மீக ரீதியாக சம்ஸ்காரங்கள் எனப்படுகின்றன._

_" ..சம்ஸ்காரங்களை உருவாக்காமல் இருப்பது என்பது, நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது._

_"பதிவுகள் உருவாகாத விதத்தில் நீங்கள் வாழ வேண்டும்._ 

_"எண்ணங்கள் மற்றும் செயல்களால் சமஸ்காரங்கள் ஏற்படுகின்றன._

_"செயல்படுவது என்பது தவிர்க்க முடியாதது._

_"ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில், 'என்னாலும் ஒரு கணம் கூட இயங்காமல் இருக்க முடியாது._

_"'ஏனெனில் நான் இயங்காமல் அல்லது செயல்படாமல் இருந்தால், இந்த பிரபஞ்சம் சீர்குலைந்து விடும்' என்கிறார்._

_"ஆகவே செயல்படுவது தவிர்க்க முடியாதது._

_"இந்த உலகில் ஒரு முறை பிறந்து விட்டால், நாம் செயல்பட வேண்டும் -- சுவாசிப்பதும் கூட ஒரு செயல்பாடுதான்._

_"செயல்படுவது தவிர்க்க முடியாதது, மற்றும் இன்றியமையாதது எனும்போது, சம்ஸ்காரங்களைத் தவிர்ப்பது எவ்வாறு?_

_"நான் செய்வது, சிந்திப்பது எதுவும், என்மீது பதிவுகளை ஏற்படுத்தாத வண்ணம், நான் செயல்பட வேண்டும்._

_"நீங்கள் மணல் மீது நிற்கும்போது அங்கே உங்கள் அடிச்சுவடுகள் பதிந்து விடுகின்றன._

_"உங்களில் புவியியல்  (geology) ஆராய்ச்சி செய்யும் சிலருக்கு, இந்த அடிச்சுவடுகள் பல காலங்களுக்குப் பிறகு_ 

_'புதை படிமங்கள் (fossils) ஆகிவிடும் என்பது தெரியும் -- அந்த புதை படிமம்‌  நிரந்தரமாக அங்கிருக்கும்._

_"ஆக, என் மீது எந்தப் பதிவும் ஏற்படாத வண்ணம்,_

_'எண்ணங்கள் என் மீது பதிவுகளை விட்டுச் செல்லாத வண்ணம் என்னால் செயல்பட இயலுமானால்,_ 

_'நான் ஏற்கனவே கொண்டு வந்திருக்கும் சம்ஸ்காரங்களுடன்,_ 

_'மேலும் சம்ஸ்காரங்கள் சேராதவாறு ஒரு வாழ்க்கையை நடத்த முடியும்._

_"மேலும் நான் கொண்டு வந்துள்ள சம்ஸ்காரங்களையும் பல்வேறு உத்திகளால் அகற்ற முடியும்."_

Popular posts from this blog

😜 Behind every successful man 😜

@@@ Eagle and snake @@@

🌹🌹 blessed with the daughters 🌹🌹