🌹🌹அன்பின் கணம் 🌹🌹
ஒரு சாமியார் சிலப் பொருட்களை
பையில் வைத்துக் கொண்டு மலை ஏறினார். உச்சிக்குச் செல்ல வேண்டும்.
சற்று தூரமே. மூச்சு வாங்குது. நடப்பதில் சிரமம். அப்போது ஒரு சிறுமி தன் தம்பியை சுமந்துக் கொண்டு பாட்டுப் பாடிக் கொண்டே சாமியாரை கடந்து செல்கிறாள்.
சாமிக்கு ஆச்சரியம். சிறுமியிடம்
கேட்டார், " எப்படிம்மா தம்பியை சுமந்துக் கொண்டு, பாட்டும் பாடிக்
கொண்டே எளிதாக மலை ஏறமுடிகிறது?", என்று கேட்டார்.
"சுவாமி, நீங்கள் சுமப்பது பொருள்.
அது கணத்தை உணர்த்தும். என் தம்பி
அன்பு. அன்பில் கனம் இருக்காது", என்றாள்.