!!"" தாயின் சிறப்பு ""!!
!!"" தாயின் சிறப்பு ""!!
இராமபிரானின் தாயான கௌஸல்யை காலமான சமயம் ஸ்ரீராமர் அதிகமான தான தர்மங்களை செய்தாராம்.
பிறகு குருவான வசிஷ்டரை வணங்கி,
ஸ்வாமி ! நான் நிறைய தான , தர்மங்களை செய்தேன் . மேலும் கோடிப் பசுக்களை ' கோதானம் ' செய்து விட்டேன் . இதனால் என் பிரியமான தாயின் மனம் மகிழ்ச்சி அடைந்திருக்கும் அல்லவா ?*
என்று கேட்டாராம் .
அதற்கு வசிஷ்டர்,
அப்பனே ! ராமா தாங்கள் அறியாதது இல்லை இருப்பினும் சொல்கிறேன்.
ஒரு சமயம், உன் தாய் உன்னை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கும்போது, நான் எதிரில் வந்தேன் !
உடனே எனக்கு மரியாதை செய்யும் நிமித்தம்,
ஆயாசத்துடன் தரையில் உட்கார்ந்திருந்தவள்,
உடனே இடக்கையை தரையில் ஊன்றிக் கொண்டு,
வெகு சிரமத்துடன் எழுந்து கொண்டாள் .!
அந்த ஒரு சிரமத்துக்கு ஈடாகாது உன் கோதானம்!
என்றாராம் !...
இராமபிரானின் கண்களில்
தாரை தாரையாய் கண்ணீர் !!