கஜராஜமுகா ! கணநாயகா !
கடமையை செவ்வனே செய்து வெற்றி அடையும் வழி காட்டுகிறாய்
கண் இமைக்கும் நேரத்தில் வரும் வினைகளை மாற்றி விடுகிறாய்
கஷ்டங்கள் மலையென வரும்போது பொடியாக்கி அமைதி தருகிறாய்
கருணையை கோடை மழையென பொழிந்து மனதுக்கு ஆனந்தம் அளிக்கிறாய்
கற்பக விருக்ஷம் போல் மனதில் விரும்பியதை அருளி மெய்சிலிர்க்க வைக்கிறாய்
கரும்பு கனிகள் அப்பம் அவல் பொறி நிவேதனம் செய்து உன் பாதகமலம் வேண்டுகிறேன்
கடைக்கண் பார்த்து என்னை மகிழ செய்திடும் என் அருமை பாலவிநாயகா
விதி,மாதவன் ஆதி விண்ணோர் வணங்கும் பிறைமதி சூடியோன் யீன்ற மாதங்கமே
கதியென்று உனது கழலே அடுத்தேன் தருணமீதையா தமியேன் மனத்தில்